ஆப்நகரம்

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காவிட்டால் இனி அபராதம் இல்லை..!

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காவிட்டால் அபராதம் விதிக்கும் மத்திய அரசின் விதிமுறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 4 Apr 2017, 6:23 pm
ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காவிட்டால் அபராதம் விதிக்கும் மத்திய அரசின் விதிமுறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil chennai hc removed two regulations in motor vehicle act
ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காவிட்டால் இனி அபராதம் இல்லை..!


சமீபத்தில் மத்திய அரசினால் அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காவிட்டால் அபராதம் விதிப்பது மற்றும் வாகனம் விற்க ஆட்சேபனை இல்லா சான்று தாமதமானால் அபராதம் விதிப்பது ஆகிய அம்சங்கள் தங்களுக்கு பல்வேறு சிரமங்களை அளிப்பதாக லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த பல மாதங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி “வாகன உரிமம் வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்க மட்டுமே சட்டம் அதிகாரம் அளிக்கிறது. அபராதம் வசூலிக்க இல்லை. எனவே ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் மத்திய அரசின் விதிமுறை ரத்து செய்யப்படுகிறது. அதே போல வாகனம் விற்க ஆட்சேபனை இல்லா சான்று தாமதமானால் அபராதம் விதிக்கும் விதிமுறையும் ரத்து செய்யப்படுகிறது.” சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதன் மூலம் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தில் இரண்டு விதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Chennai HC removed two regulations in Motor Vehicle act

அடுத்த செய்தி