ஆப்நகரம்

’டெவில் சிக்ஸ்டீன்’ - இதவிட ஃபாஸ்ட் உலகத்திலேயே இல்ல; வேகத்தில் மின்னலையே மிஞ்சிவிடும்!

5000hp திறன் கொண்ட டெவில் சிக்ஸ்டீன் கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Nov 2017, 4:19 pm
டெல்லி: 5000hp திறன் கொண்ட டெவில் சிக்ஸ்டீன் கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil devel sixteen will give you an adrenalin rush
’டெவில் சிக்ஸ்டீன்’ - இதவிட ஃபாஸ்ட் உலகத்திலேயே இல்ல; வேகத்தில் மின்னலையே மிஞ்சிவிடும்!


துபாயில் நடைபெற்ற மோட்டார் ஷோவில் ‘டெவில் சிக்ஸ்டீன்’ என்ற கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்டீவ் மோரிஸ் இஞ்சின் என்ற சிறப்பு இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த 2013ல் துபாய் மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிவேக கார் நடைமுறைக்கு வரவில்லை. அந்த மாடல் கனவாகவே போனது. இந்நிலையில் புதிய மாடல் அதிவேக கார் செய்முறை விளக்கத்துடன் நிரூபித்துக் காட்டப்பட்டுள்ளது.

வருங்காலத்தின் பறக்கும் வாகனம் போன்ற வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. 5000hp திறன் கொண்ட கார், மின்னல் வேகத்தில் பறக்கக் கூடியது.



16 சிலிண்டர்கள் உடன் 12.3 லி குவாட் டர்போ சார்ஜ் இஞ்சின் கொண்டது. மணிக்கு 500 கி.மீ வேகத்தில் செல்லக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

This 5000hp Devel Sixteen Will Give You An Adrenalin Rush You Won't Be Able To Shake Off.

அடுத்த செய்தி