ஆப்நகரம்

டெலிவிரி தேவைக்காக மின்சார வாகனங்களை இயக்க ஃபிளிப்கார்ட் முடிவு..!

ஆன்லைன் வர்த்தக்கத்தில் இந்தியாவின் முதல் நிறுவனமாக உள்ள ஃபிளிப்கார்ட் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.

Samayam Tamil 28 Jun 2019, 8:41 pm
பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் தேவைக்காக மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்களை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக ஃபிளிப்கார்ட்அறிவித்துள்ளது. இதை மார்ச் 2020ம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Samayam Tamil பொருட்கள் டெலிவிரிக்காக மின்வாகனங்களை பயன்படுத்தும் ஃபிளிப்கார்ட்
பொருட்கள் டெலிவிரிக்காக மின்வாகனங்களை பயன்படுத்தும் ஃபிளிப்கார்ட்


ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழும் ஃபிளிப்கார்ட், பொருட்களை டெலிவிரி செய்யும் தேவைக்காக மின்வாகனங்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்கும் தேவைக்காக தற்போது டீசல் மற்றும் பெட்ரோல் ஆற்றலினால் இயங்கும் வாகனங்களை அந்நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. தற்போது எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு மின்வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

மின்வாகனங்களுக்கு மாறும் ஃபிளிப்கார்ட்


அதை கருத்தில் கொண்டு ஃபிளிப்கார்ட் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2020ம் ஆண்டு மார்சிற்கு பிறகு, மின்சார ஆற்றலில் இயங்கும் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை மட்டுமே டெலிவெரி தேவைக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்டின் இந்த முயற்சி காற்று மாசுபாட்டை குறைப்பதோடு மட்டுமின்றி, ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் மற்ற நிறுவனங்கள் கூட இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வழிவகை செய்துள்ளது. இந்த முயற்சிகளால் நாட்டில் மின்வாகன நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, டெல்லியில் 10 மின்சார வேன்கள், ஹைதராபாத்திரத்தில் 8 மின்சார வாகனங்கள் மற்றும் பெங்களூருவில் 30 மின்சார இருசக்கர வாகனங்களை வைத்து ஃபிளிப்கார்ட் இந்த நடவடிக்கையை சோதனை முறையில் முயற்சித்து பார்த்தது.

அதில் கிடைத்த நல்ல முடிவுகளை வைத்து தற்போது இந்த வழக்கத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இதில் நாடுமுழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் 160 மூன்று சக்கர வாகனங்களும் அடக்கம்.

அடுத்த செய்தி