ஆப்நகரம்

ஐதராபாத்தில் புதிதாக சார்ஜிங் மையங்கள்; எலக்ட்ரிக் வாகனங்கள் வசதிக்காக அறிமுகம்!

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபார்சும், எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சார்ஜ் செய்ய இந்தியன் ஆயில் விற்பனையகங்களில் சார்ஜிங் மையங்களை உருவாக்கியுள்ளது.

Samayam Tamil 7 Jul 2018, 10:56 pm
ஐதராபாத்: பின்லாந்து நாட்டைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபார்சும், எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சார்ஜ் செய்ய இந்தியன் ஆயில் விற்பனையகங்களில் சார்ஜிங் மையங்களை உருவாக்கியுள்ளது.
Samayam Tamil Vehicle Charging


இந்தியாவிற்கான பின்லாந்து தூதர் நினா வாசுகுன்லஹ்தி, இந்த வசதியை தொடங்கி வைத்தார். அவர் ராஜ் பவன் சாலையில் அமைந்துள்ள கோல்ட்ஸ்டிரைக் எரிபொருள் மற்றும் சேவை மையத்தில் சார்ஜிங் மையத்தை திறந்து வைத்தார்.

மற்றொரு சார்ஜிங் மையம், பேகும்பேட்டையில் இந்தியன் ஆயில் விற்பனையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் இந்தியன் ஆயில் விற்பனையகங்களின் இரண்டு இடங்களில் சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. படிப்படியாக 2 ஆண்டுகளில் 50 விற்பனையகங்கள் அமைக்கப்படும் என்று ஃபார்சும் இந்தியா நிர்வாக இயக்குநர் சஞ்சய் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 150 முதல் 200 சார்ஜிங் மையங்களை அமைக்க ஃபார்சும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேசமயம் திறக்கப்படும் சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கை, எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையைப் பொறுத்தே அமையும் என்று கூறினார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மூத்த அதிகாரி கூறுகையில், பின்லாந்து நிறுவனமான ஃபார்சும் எங்களுடன் கூட்டு சேர்ந்து, ஐதராபாத்தில் சார்ஜிங் மையங்களை முதல்கட்டமாக அமைத்துள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐடி மற்றும் தொழிற்சாலைகளுக்கான தெலுங்கானா முதன்மை செயலாளர் ஜெயேஷ் ராஜன், மாநில அரசின் பசுமை ஆற்றல் திட்டத்திற்கு உதவும் வகையில் ஃபார்சும் செயல்படுவதால் பல்வேறு சலுகைகள் வழங்குவதாக தெரிவித்தார்.

Fortum launches charging stations for electric vehicles in Hyderabad.

அடுத்த செய்தி