ஆப்நகரம்

கார்கள் விலையை உயர்த்துவதாக ஜெனரல் மோட்டார்ஸ் அறிவிப்பு

2017ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாக, தனது கார்கள் விலையை ரூ.30,000 வரை அதிகரிக்க உள்ளதாக, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

TNN 20 Dec 2016, 6:55 pm
2017ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாக, தனது கார்கள் விலையை ரூ.30,000 வரை அதிகரிக்க உள்ளதாக, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
Samayam Tamil general motors to hike prices by up to rs 30000 from january
கார்கள் விலையை உயர்த்துவதாக ஜெனரல் மோட்டார்ஸ் அறிவிப்பு


அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், சர்வதேச வாகனச் சந்தையில் முன்னிலையில் உள்ளது. இந்நிறுவனத்தின் ஷெவர்லேட், பீட் ரக கார்களுக்கு இந்திய சந்தையில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இதன்படி, இந்திய வாகனச் சந்தையில் மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக, 5வது இடத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளது.

இந்நிறுவனம், வரும் ஜனவரி மாதம் முதலாக, தனது அனைத்து ரகக் கார்களின் விலையை ரூ.30,000 வரை உயர்த்த உள்ளதாக, அறிவித்துள்ளது. வாகன உற்பத்திச் செலவு மற்றும் சந்தைகளின் தேவையை கருத்தில்கொண்டு இம்முடிவை மேற்கொள்வதாக, நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே மாருதி சுசூகி, ரெனால்ட் நிசான், ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களும் கார்கள் விலையை உயர்த்துவதாக, தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

General Motors India Tuesday said it will hike prices of its vehicles by up to Rs 30,000 from next month to offset the rise in inputs costs and the adverse impact of foreign exchange fluctuation.

அடுத்த செய்தி