ஆப்நகரம்

டிரைவர் இல்லாத வேநோ கார்கள்: விரைவில் சேவையை துவங்கும் கூகுள்!

புதுடெல்லி: தானியங்கி கார்கள் சேவையை கூகுள் நிறுவனம் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 14 Nov 2018, 2:35 pm
பிரபல கூகுள் நிறுவனம் இணையம் சார்ந்த தொழில்நுடப் சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது.
Samayam Tamil 1


அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனம் தற்போது தானாக இயங்கக்கூடிய கார்களை வடிவமைபதில் வெற்றி பெற்றது. சுமார் எட்டு வருடங்களாக நடைப்பெற்ற சோதனையில் இந்த நிறுவனம் வெற்றி பெற்று சாதித்தது. கூகுளின் இந்த காரிற்கு வேமோ என பெயரிடப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமாக சாலையில் உள்ள போக்குவரத்து சூழல்களை அறிந்து அதற்கு ஏற்ப செயல்படும். இதனால் மனித தவறினால் ஏற்படும் விபத்துக்கள் மிகவும் குறையும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. கண்தெரியாத மாற்றுதினளிகள் கூட இந்த கார்களை இயக்க முடியும்.
இந்நிலையில் இந்த கார்களின் சேவையை வரும் டிசம்பர் மாதம் துவங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி