ஆப்நகரம்

Harley-Davidson: 99 பாயிண்ட் தரச் சோதனையுடன், பயன்படுத்திய பைக்குகளை விற்கும் ஹார்லே டேவிட்சன்!

புதுடெல்லி: ஏற்கனவே பயன்படுத்திய பைக்குகளை, மீண்டும் விற்கும் ஹார்லே-டேவிட்சன் திட்டம் குறித்து இங்கே காணலாம்.

TIMESOFINDIA.COM 23 Sep 2018, 10:08 am
உலக அளவில் ஹார்லே-டேவிட்சன் பைக்குகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அதிக விலை, சூப்பர் ஸ்டைல், சிறந்த அனுபவம் என்ற அம்சங்களுடன் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லே-டேவிட்சன், உலகம் முழுவதும் கிளை பரப்பி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
Samayam Tamil Harley Davidson


இந்நிலையில் ”ஹார்லே-டேவிட்சன் ஒரிஜினல்ஸ்” என்ற பெயரில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பைக்குகளை மீண்டும் விற்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குகள் மிகச்சிறந்த தரச் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

இதற்காக 99 பாயிண்ட் தரச் சோதனையை மேற்கொள்கிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் திருப்தி உடன், பைக்குகளை வாங்கிச் செல்லலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அவ்வாறு வாங்கும் மோட்டார் சைக்கிள்களுக்கு ஓராண்டு உத்தரவாதமும் அளிக்கிறது.

இது புதிய ஹார்லே-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்கப்படும் அதே வகையிலான உத்தரவாதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை 2 முதல் 3 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

ஹார்லே-டேவிட்சனில் புதிய மோட்டார் சைக்கிள்கள் ரூ.5.31 லட்சத்தில் இருந்து விற்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்ட்ரீட் 750 உள்ளிட்ட மாடல்கள் அடங்கும். அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மோட்டார் சைக்கிள்கள் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Harley-Davidson enters pre-owned motorcycle business.

அடுத்த செய்தி