ஆப்நகரம்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் ADV, எக்ஸ்ட்ரீம் 200R பைக்குகளுக்கு புதிய அம்பாசிடராக விராட் கோலி நியமனம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய பிராண்ட் அம்பாசிடராக விராட் கோலியை அறிமுகம் செய்துள்ளது.

Samayam Tamil 12 Sep 2018, 11:59 am
புதுடெல்லி: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய பிராண்ட் அம்பாசிடராக விராட் கோலியை அறிமுகம் செய்துள்ளது.
Samayam Tamil Kohli


ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்க்கும் வண்ணம், விராட் கோலியை புதிய அம்பாசிடராக நிர்ணயம் செய்துள்ளது. ஏனெனில் இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிஸியாகவும், ஏராளமான இந்தியர்களால் விரும்பக்கூடியவராகவும் இருக்கிறார். அவரது சமூக வலைத்தள பகிர்வு ஒப்பிட முடியாதது.

பேஸ்புக்கில் 37 மில்லியன் ரசிகர்களையும், டுவிட்டரில் 26.4 மில்லியன் ரசிகர்களையும், இன்ஸ்டாகிராமில் 23.9 மில்லியன் ரசிகர்களையும் கொண்டுள்ளார். 29 வயதாகும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, உலகில் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். போர்ப்ஸ் பத்திரிகை தகவலின்படி, 2017ல் அவரது ஆண்டு வருமானம் ரூ.175 கோடி($24 மில்லியன்) ஆகும்.

ஹீரோ நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடர் ஆனது குறித்து கோலி கூறுகையில், எனது தலைமுறையைச் சேர்ந்த லட்சக்கணக்கான இந்தியாவின் இளம் ஆண்களும், இளம் பெண்களும் ஹீரோ மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே மிகவும் பெருமையான, சிறப்பான தருணமாக இதை நான் உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் பவன் முஞ்சால், பிராண்ட் ஹீரோ ஆனது நம்பிக்கை, சிறப்பு, நீண்ட ஆயுள் ஆகியவற்றைப் பெற்றது. இதற்கான உண்மையான அடையாளமாக சர்வதேச அளவில் புகழ் பெற்ற கோலி திகழ்வார். இன்றைய இளைஞர்களை பிரதிபலிக்கும் வகையில் விளங்குகிறார் என்றார். ஹீரோ மோட்டார் சைக்கிள் உடன் கோலி இருக்கும் புகைப்படங்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதையடுத்து அவரது வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் புதிய பிளாக்‌ஷிப் மோட்டார் சைக்கிள் எக்ஸ்ட்ரீம் 200Rஐ கோலி அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த பைகில் 200 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், 18.4 PS மற்றும் 17.1 Nm ஆற்றல் உடன் ரூ.89,900க்கு விற்பனைக்கு வருகிறது. இதேபோல் ஹீரோ எக்ஸ்பல்ஸ் ADVவிலும் 200சிசி எஞ்சின் திறன் பெற்றுள்ளது.

Hero Xpulse ADV, Xtreme 200 R will be promoted by Virat Kohli.

அடுத்த செய்தி