ஆப்நகரம்

ஹூண்டாய் நிறுவனத்தின் #Xcent கார் இந்தியாவில் அறிமுகம்!

ஹூண்டாய் நிறுவனம், அதன் புதிய தயாரிப்பான #Xcent ரகக் காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

TOI Contributor 20 Apr 2017, 3:03 pm
ஹூண்டாய் நிறுவனம், அதன் புதிய தயாரிப்பான #Xcent ரகக் காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
Samayam Tamil hyundai facelift xcent launched
ஹூண்டாய் நிறுவனத்தின் #Xcent கார் இந்தியாவில் அறிமுகம்!


சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட #TataTigor ரகக் காருக்குப் போட்டியாக இந்த ஹூண்டாய் எக்ஸன்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் என இரண்டு ரக என்ஜீன்கள் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த காரின் விலை ரூ.5.38 லட்சத்தில் தொடங்கி, ரூ.8.41 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர செடான் வகையிலானது என்றும், தனது முந்தைய தயாரிப்பான #Elantra காரில் உள்ள அனைத்து அம்சங்களையும் கொண்டதென்றும் ஹூண்டாய் குறிப்பிட்டுள்ளது.





சிறப்பம்சங்கள்:
ஆப்பிள் கார்ப்ளே, ஆன்ட்ராய்ட் ஆட்டோ, மிர்ரர் லிங்க், உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் சிறப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1.2 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு என்ஜீன், 4 ஸ்பீட் ஆட்டோ, 75 பிஎஸ் இயங்குதிறன் கொண்டதாகும்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20.14 கிலோமீட்டரும், ஒரு லிட்டர் டீசலுக்கு 25.4 கிலோமீட்டர் மைலேஜூம் கொடுக்கக்கூடியதாகும்.

Hyundai India on Thursday took the covers off the 2017 Xcent at a starting price of Rs 5.38 lakh for petrol and Rs 6.28 lakh for diesel (all prices are ex-showroom, Delhi). In its latest avatar, the mid-size sedan offers several news including ABS as standard across variants.

அடுத்த செய்தி