ஆப்நகரம்

ஹூண்டாய் நிறுவனத்திற்கு 2016ம் ஆண்டுக்கான இந்திய உற்பத்தியாளர் விருது!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், 2016ம் ஆண்டுக்கான இந்திய உற்பத்தியாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

TOI Contributor 17 Dec 2016, 10:46 am
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், 2016ம் ஆண்டுக்கான இந்திய உற்பத்தியாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil hyundai wins indian manufacturer of the year award
ஹூண்டாய் நிறுவனத்திற்கு 2016ம் ஆண்டுக்கான இந்திய உற்பத்தியாளர் விருது!


ஹூண்டாய் மோட்டார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஃபிராஸ்ட் அண்ட் சுல்லிவன் நிறுவனம் இந்திய அளவில் இருந்து, பல்வேறு பிரிவைச் சேர்ந்த 93 நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, ஹூண்டாய் நிறுவனத்திற்கு விருது வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், ஃபிராஸ்ட் அண்ட் சுல்லிவன் நிறுவனத் தலைவர் அரூப் ஜூட்ஸி பங்கேற்று, இந்த விருதை வழங்க ஹூண்டாய் மோட்டார் இந்தியா தலைமை இயக்குனர் ஒய்.கே.கூ பெற்றுக் கொண்டார்.

இந்திய வாகனத் துறையில் தொடர்ந்து பல பயனுள்ள சாதனைகளை தொடர்ந்து மேற்கொள்வதில் கவனம் செலுத்தப்படும் என, ஹூண்டாய் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary:

Hyundai Motor India was adjudged the "Indian Manufacturer of the Year - 2016" by Frost & Sullivan at the India Manufacturing Excellence Awards 2016.

அடுத்த செய்தி