ஆப்நகரம்

பார்வை குறைபாடுடையவர்களுக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்- மத்திய அரசு..!

வண்ணங்களை வேறுபடுத்தி பார்க்க இயலாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்கிற உத்தரவை நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Samayam Tamil 16 Mar 2020, 3:14 pm
ஆங்கிலத்தில் colour blindness என்று குறிப்பிடப்படும் வண்ணங்களை பிரித்து பார்க்க முடியாத குறைபாடு கொண்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான சட்டமுறைகள் உருவாக்கப்படவுள்ளன.
Samayam Tamil இனி இவர்களும் வாகனம் ஓட்டலாம்
இனி இவர்களும் வாகனம் ஓட்டலாம்


இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, நிறத்தை வேறுபடுத்தி பார்க்க முடியாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான முன்திட்டப் பணிகளை மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

Read More: மின்வாகன உற்பத்திக்கு பிரத்யேக பூங்கா- தமிழக அரசு அறிவிப்பு..!

டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த கண் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதற்கான திட்டப்பணிகள் செயல்ப்படுத்தப்படவுள்ளன. நாட்டிலுள்ள நிறப் பார்வை குறைபாடுகள் கொண்டவர்களிடமிருந்து குவிந்த கோரிக்கைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனையின் படி, இதற்கான திட்ட முன்வரைவுகள் உருவாக்கப்படுகின்றன. உலகளவில் நிறங்களை பிரித்தறிந்து வேறுபடுத்த முடியாதவர்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

Read More: தருமபுரி - ஓசூர் இடையே அமையும் புதிய 4 வழிச்சாலை: முழு விபரம் உள்ளே..!

அதில், இந்த பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு சிவப்பு விளக்கு மற்றும் மற்ற நிறங்களை பிரித்து பார்க்க வித்தியாசம் தெரியும். இதனால் ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் சிக்கல் இருக்காது. எனினும், அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிட்டதக்கது.

Read More: கொரோனா எதிரொலி: பொது போக்குவரத்து வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

சர்வதேச நாடுகளின் பின்பற்றும் வகையில் போக்குவரத்து நிறுத்தங்களுக்குரிய விளக்கு அமைப்புகள் உருவாக்கப்பட்டால், இவர்களுடைய போக்குவரத்து பயன்பாடு எளிதாக அமையும்.

இந்தியாவிலுள்ள மக்கள் தொகையில் 8 சதவீத ஆண்களும் 0.4 சதவீத பெண்களுக்கும் நிறத்தை வேறுபடுத்து பார்க்க இயலாத குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யாருக்கும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி