ஆப்நகரம்

மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை 4% சரிவு

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், டிசம்பர் மாத முடிவில், அதன் வாகன விற்பனை 4 சதவீதம் சரிவடைந்துள்ளதாகக் கூறியுள்ளது.

TNN 2 Jan 2017, 3:49 pm
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், டிசம்பர் மாத முடிவில், அதன் வாகன விற்பனை 4 சதவீதம் சரிவடைந்துள்ளதாகக் கூறியுள்ளது.
Samayam Tamil mahindra mahindra sales decline 4 at 36363 units in december
மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை 4% சரிவு


இதன்படி, ஒட்டுமொத்த விற்பனை 36,363 ஆக உள்ளதென்றும், முந்தைய 2015ம் ஆண்டின் டிசம்பர் மாதகாலத்தில் இதுவே 37,915 ஆக இருந்ததென்றும் மஹிந்திரா கூறியுள்ளது.

மதிப்பீட்டு காலத்தில், உள்நாட்டில் மட்டும் 34,310 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதேபோன்று, ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2,053 ஆகவும் உள்ளது. ஏற்றுமதி, உள்நாட்டு விற்பனை இரண்டுமே பெரும் சரிவடைந்துள்ளதாக, மஹிந்திரா குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, ஸ்கார்பியோ, எக்ஸ்யுவி 500, பொலிரோ, வெரிடோ ஆகிய கார்களின் விற்பனை சிறப்பாகக் காணப்பட்டதென்று, மஹிந்திரா தெரிவித்துள்ளது.

Auto major Mahindra & Mahindra on Monday reported 4 per cent decline in total sales at 36,363 units in December.

அடுத்த செய்தி