ஆப்நகரம்

கொஞ்சம் அதிகம் தான்; இந்த அளவுக்கு மகிந்திரா மாரஸ்ஸோ விலை ஏறுமுனு எதிர்பார்க்கலை!

புதுடெல்லி: மகிந்திரா & மகிந்திரா லிமிடெட் தனது மாரஸ்ஸோ மாடல் காரின் விலையை உயர்த்துகிறது.

TIMESOFINDIA.COM 17 Nov 2018, 3:35 pm
இந்தியாவில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி மகிந்திரா மாரஸ்ஸோ மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம் ஆகும். இந்நிலையில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ரூ.30,000ல் இருந்து ரூ.40,000 வரை விலை உயர்த்தப்படுவதாக மகிந்திரா & மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil mahindra-marazzo


இதுதொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் டிவிஷன் விற்பனை மற்றும் விளம்பரப்பிரிவு தலைவர் வீஜே ராம் நக்ரா, மாரஸ்ஸோ அறிமுகம் செய்யப்பட்ட போது, அறிமுக விலை ஒன்று நிர்ணயிக்கப்பட்டது.

இது 4 மாதங்கள் மட்டுமே வழங்க திட்டமிட்டோம். எனவே வரும் ஜனவரி 1, 2019 முதல் மாரஸ்ஸோவின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம் என்றார். தற்போது கார் சந்தையில் 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்ட மாடலாக மாரஸ்ஸோ விற்பனைக்கு கிடைக்கிறது.

அதிகப்படியான இருக்கை வசதி உடன், அற்புதமான பயண அனுபவத்தை அளிக்கிறது. இந்த கார் டோயோடா இன்னோவா கிரிஸ்டாவிற்கு நேரடி போட்டியாக விளங்குகிறது.

பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய மாரஸ்ஸோ, சுறாவின் உடலமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதன் பற்கள் போன்று முன்புற கிரில்லே இருக்கிறது.

வால் போன்று பின்புற லேம்ப் கிளஸ்டர்ஸ், மேற்பகுதியில் சுறாவைப் போல ஆண்டனா உள்ளன. உட்புறம் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே உடன் பொழுதுபோக்கு சிஸ்டம், ஸ்மார்ட்போன் ஒருங்கிணைப்பு காணப்படுகின்றன.

பின்புற ஏசி வெண்ட்ஸ் இருப்பதால் விரைவாக குளிர்ச்சி அடைய உதவுகிறது. இதில் 123 PS, 1.5 லி டீசல் பவர் டிரைன், 300 Nm பீக் டர்க்யூ திறன், 6 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், 17.3 கி.மீ/லி எரிபொருள் திறன் பெற்றுள்ளது.

இரட்டை முன்புற ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் உடன் ஈபிடி, பிரேக் அசிஸ்ட், ஐசோபிக்ஸ் சைல்ட் சீட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

அடுத்த செய்தி