ஆப்நகரம்

ஆம்னி காரின் தயாரிப்பு பணிகள் நிறுத்தம்- மாருதி சுஸுகி தகவல்

மாருதி சுஸுகி ஆம்னி காரின் தயாரிப்பு பணிகளை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 28 Oct 2018, 10:25 am
இந்திய வாகனச் சந்தையை கடந்த முப்பது ஆண்டுகளாக ஆக்கிரமித்து வந்த ஆம்னி காரின் தயாரிப்பு பணிகளை நிறுத்த மாருதி சுஸுகி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil maruti-suzuki-omni-car
விடைபெறும் மாருதி சுஸுகி ஆம்னி கார்


1984ம் ஆண்டின், இந்தியாவில் அறிமுகமான ஆம்னி கார், தனிநபர் வாகனம், வணிக பயன்பாட்டு வாகனம், சரக்கு வாகனம், குடும்பத்தினருக்கான வாகனம் என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இன்றும் ஆம்னி காரின் பயன்பாடு இந்திய சாலைகளில் அதிகம் காணப்படுகின்றன. இந்நிலையில், வரும் 2020ம் ஆண்டில் இந்த காரின் தயாரிப்பு பணிகளை நிறுத்திட மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.

வாகன பயன்பாட்டுக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகள் வரும் 2020ம் ஆண்டில் நடைமுறைக்கு வரவுள்ளன. அந்த விதிகளுக்குள் மாருதி ஆம்னி வராது என்பதால், மாருதி சுஸுகி இந்த முடிவை எடுத்துள்ளது.

அறிமுகமானதிலிருந்து, 800சிசி இழுவை திறன் கொண்ட எஞ்சின் பயன்பாட்டில் உள்ள ஆம்னி கார், 90-களில் மிக பிரபலமடைந்தது. இன்றும் இதற்கு சந்தையில் வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி