ஆப்நகரம்

சென்னைக்கு அருகே புதிய ஹூண்டாய் i30 சோதனை ஓட்டம்; ரகசியத்தை உடைத்த வல்லுநர்!

சென்னை: புதிய ஹூண்டாய் i30 கார் சோதனை ஓட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 27 Nov 2018, 3:36 pm
சர்வதேச கார் சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் i20க்கு பிறகு, பிரீமியம் ஹேட்ச்பேக் i30 மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த புதிய தலைமுறை மாடல் சென்னையின் சாலைகளில் தொடர்ந்து சோதிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil Hyundai i30


இதுகுறித்த தகவலை யு-டியூப் பக்கத்தில் ஆட்டோமொபைல் வல்லுநர் ரிஷி குமார் வெளியிட்டுள்ளார். புதிய ஹூண்டாய் i30 மாடலில் TFT இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 17 இஞ்ச் டபுள் அல்லாய் வீல்ஸ், டிஆர்எல் உடனான எல்.இ.டி முகப்பு விளக்குகள், பனோரமிக் சன்ரூப், டச் ஸ்கிரீன் பொழுதுபோக்கு அம்சங்கள், ஹீட்டட் மற்றும் வெண்டிலேட்டட் இருக்கைகள் இருக்கின்றன.

ஓட்டுநர் இருக்கை 10 வகைகளில் எலக்ட்ரிகல் அட்ஜெஸ்ட், ஒயர்லெஸ் போன் சார்ஜிங், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் ஹூண்டாய் i30 மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொண்ட மாடல்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, 1.4 லி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 118 bhp ஆற்றல், 157 Nm டர்க்யூ திறன் வெளியீடு கொண்டிருக்கும். டீசல் எஞ்சின் 134 bhp ஆற்றல், 157 Nm டர்க்யூ திறனை வெளியிடும்.

இரு எஞ்சின்களும் 6 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. எரிபொருள் திறனைப் பொறுத்தவரை பெட்ரோலுக்கு 17 கிமீ/லி மற்றும் டீசலுக்கு 22 கி.மீ/லி பெற்றிருக்கும். இதன் விலை எதிர்பார்ப்பை விட சற்று கூடுதலாக இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி