ஆப்நகரம்

அறிமுகமானது பட்டைய கிளப்பும் சுசுகி இன்ட்ரூடர் 150 பைக்!

சுசுகி நிறுவனத்தின் புதிய மாடல் பைக்கான இன்ட்ரூடர் 150 தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை ரூ.98,340 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNN 7 Nov 2017, 7:38 pm
சுசுகி நிறுவனத்தின் புதிய மாடல் பைக்கான இன்ட்ரூடர் 150 தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை ரூ.98,340 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil new suzuki bike intruder 150 released in india
அறிமுகமானது பட்டைய கிளப்பும் சுசுகி இன்ட்ரூடர் 150 பைக்!


பஜாஜ் நிறுவனத்தின் அவென்ஜர் பாடல் பைக்கிற்கு போட்டியாக இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் 154.9சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், முன்பக்க மற்றும் பின்புக்க டிஸ்க் பிரேக்களுடன் க்ரூசர் ஒன்றையும் சுசுகி வழங்கியுள்ளது.

பைக்கின் முன்பக்கத்தில் உள்ள ஹெட்லேம்ப் முக்கோண வடிவில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் கவுள் அதிவேகமாக செல்லும் போது வாகனஓட்டியின் முகத்தில் காற்று நேரடியாக வீசுவதை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் இன்டிகேட்டர்கள் முன்பக்க கவுளில் வழங்கப்பட்டுள்ளன மாற்றம் குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட ரியர் வியூ கண்ணாடிகள் பிரீமியம் தோற்றத்தைக் கொண்டுள்ளன. இதன் சிறப்பம்சமான பெட்ரோல் டேங்க், மிகவும் வித்தியாமான தோற்றத்துடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

New SUZUKI bike Intruder 150 released in India.

அடுத்த செய்தி