ஆப்நகரம்

உலக கார் சந்தை விற்பனையில் சாதனை படைத்த ’நிஸான் எலக்ட்ரிக்’ - இந்தியாவில் அறிமுகம்!

நிஸான் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன.

Samayam Tamil 10 Jun 2018, 11:35 am
சென்னை: நிஸான் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன.
Samayam Tamil Leaf Electric Car
நிஸான் லீஃப் 2


ஜப்பான் நாட்டின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமாக ‘நிஸான் மோட்டார்ஸ்’ விளங்குகிறது. இது நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு, கார்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் ’லீஃப் 2’ மாடல் எலக்ட்ரிக் கார்களை, இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக நிஸான் நிறுவனத்தின் இந்திய தலைவர் தாமஸ் குவல் ’எகானாமிக்ஸ் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், நடப்பு நிதியாண்டில் ’லீஃப் 2’ வகை எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்கிறோம்.
இது உலக கார் சந்தையில் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. முன்னதாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்க உள்ளோம். எங்கள் தயாரிப்பை பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவார்கள் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம்.

சென்னையில் 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நிஸான் நிறுவன வளாகத்தில், ’நிஸான் லீஃப் 2’ காரை சோதனை ஓட்டத்திற்கு அளிக்க உள்ளோம். அப்போது எங்களின் தயாரிப்பு குறித்து முழுவதுமாக தெரியவரும் என்று கூறினார்.

அதேசமயம் காரின் விலை குறித்து, தாமஸ் குவல் தெரிவிக்கவில்லை. இந்த எலக்ட்ரிக் கார் இந்திய மோட்டார் வாகனச் சட்டத் திட்டங்களின் படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக உறுதி அளித்தார்.

இந்திய சந்தையில் ‘நிஸான் லீஃப் 2’ எலக்ட்ரிக் கார், ரூ.30 - 40 லட்சம் வரை விற்பனைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. தனது நிறுவன பங்குகளின் விலையை உயர்த்தும் வகையில், ஒவ்வொரு 6 மாதத்திற்கும் புதிய மாடல் கார்களை வெளியிட்டு நிஸான் அசத்தி வருகிறது.

Nissan to bring its electric car to India this fiscal year.

அடுத்த செய்தி