ஆப்நகரம்

பீா் மூலம் இயங்கும் காா்கள்; விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பீா் வகைகளை பயன்படுத்தி காரை இயக்கக்கூடிய சோதனை வெற்றிபெற்றுள்ளதாக ஆராய்ச்சியாளா்கள் தொிவித்துள்ளனா்.

TOI Contributor 8 Dec 2017, 11:54 am
பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பீா் வகைகளை பயன்படுத்தி காரை இயக்கக்கூடிய சோதனை வெற்றிபெற்றுள்ளதாக ஆராய்ச்சியாளா்கள் தொிவித்துள்ளனா்.
Samayam Tamil petrol vehicles could run car on renewable beer fuel
பீா் மூலம் இயங்கும் காா்கள்; விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு


இங்கிலாந்து விஞ்ஞானிகள் தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக காா்களுக்கு புதிய எரி பொருளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

மதுவில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்றினால் அதை எரிபொருளாக பயன்படுத்த முடியும். எனவே மதுவகைகளில் சோதனைகள் நடத்தி பிரிக்கப்பட்டது. ஆனால் அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.

மதுவகையில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்ற முடியவில்லை. அப்படி மாற்றினாலும் அது வாகனத்துக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, பீரில் இச்சோதனையை செய்தனர். அது வெற்றிகரமாக முடிந்து இருக்கிறது.

பீாில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் வாகனத்தை சரியாக இயக்கியது. அதிக மைலேஜீம் கொடுத்தது. எனவே பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பீர் எரி பொருளாக மாறும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பீரில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்றுவது மட்டும் தற்போது கடினமாக உள்ளது. அதுவும் சரி செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி