ஆப்நகரம்

எலெக்ட்ரிக் கார் வாங்க ரூ.4 லட்சம் வரை மானியம்

எலெக்ட்ரிக் கார், பைக், ஆட்டோ வாங்குபவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 25 Aug 2018, 6:11 pm
எலெக்ட்ரிக் கார், பைக், ஆட்டோ வாங்குபவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Electric_Car_Concept_XL_721_420_80_s_c1


மத்திய அரசு வட்டாரத்திலிருந்து கிடைத்துள்ள தகவலின்படி, எலெக்ட்ரிக் கார், பைக், ஆட்டோ வாங்குபவர்களுக்கு ரூ.1.4 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க இருப்பதாகத் தெரிகிறது.

இந்த மானியம் வாகனத்தின் விலையில் 20% வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. காரின் பேட்டரி அளவைப் பொருத்து ஒரு கிலோவாட்டுக்கு ரூ.10,000 வீதம் வழங்கப்படும். 14 கிலோவாட் பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் காருக்கு ரூ.1.4 லட்சம் மானியம் கிடைக்கும்.

2 கிலோவாட் பேட்டரியில் இயங்கும் எலெகட்ரிக் பைக் அல்லது சைக்கள் வாங்கும் போது ரூ.20,000 மானித்தொகையைப் பெறலாம். இதே போல மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.45,000 வரை மானியம் வழங்கப்படும்.

அதிக திறன் கொண்ட பேட்டரியில் இயங்கும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார்களுக்கு ரூ.4 லட்சம் வரை மானியம் கிடைக்கம். எனினும் இந்த வகைக் கார்கள் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு இல்லை.

அடுத்த செய்தி