ஆப்நகரம்

ஹெல்மெட் போடாமல் சிக்கியவர்களுக்கு போலீசார் வழங்கிய நூதன தண்டனை..!

ஹெல்மெட் போடாமல் வாகன ஓட்டியவர்களை பிடித்த திண்டுக்கல் மாவட்ட போலீசார் அவர்களுக்கு வழங்கிய நூதன தண்டனை மாநிலம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

Samayam Tamil 16 Aug 2019, 11:23 pm
போக்குவரத்து விதிமீறல்கள் நடக்காமல் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும், விதிமீறல் குற்றத்திற்காக வசூலிக்கப்படும் அபராதத் தொகை மற்றும் தண்டனைகள் மேலும் வலிமையாக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டியவர்களுக்கு சேர்ந்த அவலம்
ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டியவர்களுக்கு சேர்ந்த அவலம்


ஆனாலும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவது பலருக்கும் பிரச்னையாக இருக்கிறது போல. விதிகளை பின்பற்றி நடப்பது நம்மவர்கள் பெரும்பாலானோருக்கு பிரச்னை தான்.

வாகனங்களில் செல்லும் போது விபத்து நடந்தால் அதில் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் தான் இதுபோன்ற விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. உரிய விதிகளுடன் வாகனத்தில் செல்வது முக்கிய கடமை என்றாலும் மிகையில்லை.

ஆனால் மாநிலத்தில் வசிக்கும் பலருக்கும் முறையான போக்குவரத்து விதிகள் தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை. அதில் அடிப்படையாக ஹெல்மெட் அணிந்து தான் இருசக்கரத்தில் பயணிக்க வேண்டும் என்பதாவது தெரிந்திருக்குமா என்றாலும் தெரியவில்லை.

மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தொடர்ந்து அவர்களையும் போலீசார் பிடித்துக் கொண்டே தான் இருக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பணியில் இருந்த காவலர்கள், ஹெல்மெட் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகளை பிடித்து நிறுத்தினர். அவர்களிடம் ஸ்பாட் ஃபைன் என்கிற குற்றத்தை பார்த்தவுடன் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை அவர்கள் வசூலிக்கவில்லை.

மாறாக, விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை பிடித்து நிறுத்திய போலீசார் பள்ளி மாணவர்களை வைத்து அவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை எடுத்துரைக்கச் செய்தனர். நம்மை விட வயதில் குறைந்த சிறுவன் சொல்லும் அறிவுரைகளை கேட்டாவது இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவர்கள் திருந்தமாட்டார்களா என்று எண்ணத்தில் அப்படிச் செய்தனர்.

அப்போது சிலர் சிறுவர்கள் சொல்லும் அறிவுரைகளால் விழிப்புணர்வு பெற்று, இனி சாலைகளில் செல்லும் போது ஹெல்மெட் அணிவோம் என உறுதி அளித்துவிட்டுச் சென்றனர். இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என அங்குள்ள காவலர்கள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி