ஆப்நகரம்

வாகனங்களில் சைடு மிரர் இல்லையென்றால் இனி அபராதம்!

கார்களில் சைடு மிரர் பயன்படுத்தவில்லை என்றால் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Jul 2018, 5:46 pm
கார்களில் சைடு மிரர் பயன்படுத்தவில்லை என்றால் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil side mirror

வாகனங்களில் பின்னால் வரும் வாகனங்களை பார்க்க உதவும் முக்கிய தேவையாக, வாகனங்களில் பக்க வாட்டில் கண்ணாடிகள் உள்ளன.

விபத்துக்கள் அதிகம் :
கடந்த 2015ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 55 கோடி வாகனங்கள் உள்ளன என கூறப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும்.


வாகனங்கள் அதிகரிப்பதோடு, சாலை விபத்துக்களும் அதிரித்த வண்ணம் உள்ளன. இதற்கு சாலை விதிகளை ஓட்டுனர் உரிமம் எடுக்கும் போது முறையாக கற்றுக்கொடுக்க வேண்டிய ஆர்.டி.ஓ அலுவலக ஊழியர்கள், லஞ்சம் பெற்று, தகுதி இல்லாத பலருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுவதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சைடு மிரர் முக்கியம் :
மேலும் வாகனத்தை ஓட்டும் பலர் வாகனத்தின் பக்கவாட்டில் பின்னால் வரும் வாகங்களை பார்த்து அதற்கேற்றார் போல ஓட்டுவதற்காக தரப்பட்டுள்ள கண்ணாடிகளை முறையாக பயன்படுத்துவதில்லை. பலர் கார்களின் கண்ணாடிகளை மூடி வைத்துக் கொண்டு ஓட்டுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் கார்களின் பக்கவாட்டு கண்ணாடியை மூடி வைத்து ஓட்டினால் அவர்களுக்கு வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்கள் மட்டுமல்லாமல், இருசக்கர வாகங்களில் பெரும்பாலானோர் இந்த கண்ணாடிகளை கழற்றி வைத்து விட்டு ஓட்டுகின்றனர். இதனால் பலர் விபத்துகளில் சிக்குகின்றனர்.
இந்த அபராதம் தற்போதைக்கு கார்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு இந்த நிபந்தனை, அபராதம் பொருந்துமா என அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.

அடுத்த செய்தி