ஆப்நகரம்

ரூ.1.63 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம் ஆனது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X!

புதுடெல்லி: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு 350X மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Nov 2018, 3:46 pm
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மாடல்களில் ஆன்டி-லாக் பிரேக்ஸ் அல்லது ஏபிஎஸ் அம்சம் இடம்பெற்றிப்பது தண்டர்பேர்டு 350X க்ருசைரில் தான். இந்த தண்டர்பேர்டு 350X ABS மாடலின் விலை ரு.1.63 லட்சம் ஆகும்.
Samayam Tamil Royal Enfield


இது முந்தைய மாடல்களை விட, ரூ.7,000 விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டின் தொடக்கத்தில் தண்டர்பேர்டு X சீரியஸ் மாடல்கள் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டன.

இது இளைஞர்களைக் கவரும் வகையில், அற்புதமான பயண அனுபவத்தைப் பெற உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தண்டர்பேர்டு 350X மாடல் ஏற்கனவே விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும் ஏபிஎஸ் மாடல் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 2019 முதல் 125சிசி விட அதிகமான திறன் பெற்ற இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைப் பூர்த்தி செய்யும் வகையில், தனது மாடல்களில் ஏபிஎஸ் வசதியை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவில் ஏபிஎஸ் வசதி கொண்ட முதல் மறு தயாரிப்பு மாடல் 350 சிசி கிளாசிக் சிக்னல்ஸ் எடிசன் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கிளாசிக் 500, ஹிமாலயன் மற்றும் கன் மெட்டல் கிரேவில் கிளாசிக் 350 ஆகியவற்றில் ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சம் இடம்பெற்றிருந்தது. மிகவும் பிரபலமான ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 மற்றும் 500 ஆகியவற்றில் ஏபிஎஸ் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X மற்றும் 500X மாடல்களில் பிளாட் ஹேண்டில் பார், புதுப்பிக்கப்பட்ட இருக்கை, நடுவே கால்வைக்கும் வசதி இருக்கின்றன. தண்டர்பேர்டு 350X மாடலைப் பொறுத்தவரை 346சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின், 19 bhp மற்றும் 28 Nm பீக் டர்க்யூ திறன், 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் உள்ளன.

அடுத்த செய்தி