ஆப்நகரம்

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை உயர்வு- இன்று முதல் நடைமுறை..!

சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, அது சென்னையில் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Samayam Tamil 15 Aug 2019, 12:11 am
தமிழக போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி நடப்போரிடம் வசூலிக்கப்பட்டும் அபராதத் தொகையை உயர்த்தியுள்ளனர். அதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில், போக்குவரத்து விதிமீறலுக்காக வசூலிக்கப்படும் அபராதத் தொகை குறைவாக உள்ளது. இதனால் குற்றத்தில் ஈடுபடுவோர் மத்தியில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் தாக்கத்தை உருவாக்கவில்லை.
Samayam Tamil சாலை போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை உயர்வு
சாலை போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை உயர்வு


இதை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து காவல்துறை அபராதத் தொகையை உயர்த்தியுள்ளது. அதன்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 10 ஆயிரம் வசூலிக்கப்படும். ஓட்டுநர் உரிமமம் இல்லாமல் வாகன ஓட்டுபவர்களிடம் ரு. 5 ஆயிரம் அபராதமும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 1000 அபராதமாக வசூலிக்கப்படும். 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தகுதி இழைப்பு செய்யப்படும்.

அதேபோல சாலைகள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி ரேஸில் ஈடுபடுவோருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இருசக்கர வாகனத்தில் அதிக நபர்களை ஏற்றிச் சென்றால் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு தகுதியிழப்பு செய்யப்படும். காரில் சீட்பெல்டு அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 1000 அபராதம் வசூலிக்கப்படும்.

ஓட்டுநர் உரிமத்தை தகுதி இழப்பு செய்த பின்பு வாகனம் ஓட்டுவோரிடம் ரூ. 10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படும். இவற்றுடன் போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதத் தொகை ரூ. 100ல் இருந்து ரூ. 500-ஆக உயர்த்தப்படுகிறது. சாலை ஒழுங்குமுறை விதிகளை மீறதலுக்கு வசூலிக்கப்படும் அபராதத் தொகை ரூ. 500-ஆக உயர்த்தப்படுகிறது.

அடுத்த செய்தி