ஆப்நகரம்

பெருசு, ரொம்ப பெருசு, ரொம்ப ரொம்ப பெருசு - அசரடிக்கும் அம்சங்களுடன் டாடா ஹேரியர்!

புதுடெல்லி: மகிந்திரா XUV500, டாடா நெக்சான் உடன் டாடா ஹேரியர் நிற்கும் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 14 Dec 2018, 11:20 pm
விரைவில் 2019 புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்நிலையில் கார் பிரியர்கள் மத்தியில் டாடா ஹேரியர் எப்போது வெளியாகும் என்று பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதன் ஆன்-ரோடு விலை ரூ.16 லட்சம் முதல் ரூ.21 லட்சம் வரை இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil Tata harrier


இது சிறிய மற்றும் பெரிய மாடல்கள் மத்தியில் போட்டியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதன் அறிமுகத்தின் போது, விலையும் ஒருங்கே தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் டாடா நெக்சான், மகிந்திரா XUV500 ஆகிய கார்கள் உடன் ஒன்றாக ஹேரியர் நிறுத்தப்பட்டிருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, நெக்சானுடன் ஒப்பிடுகையில் சற்று பெரியதாக டாடா ஹேரியர் இருக்கிறது.

அதேசமயம் மகிந்திரா XUV500 உடன் நிற்கையில், ஹேரியர் அவ்வளவு பெரிதாக தோன்றவில்லை. டாடா ஹேரியர் மாடல் கார் உலகத் தரத்திலான எஸ்.யு.வி ஆகும். இதன் பெரும்பாலான அம்சங்கள் ஜாகுவார் லேண்ட் ரோவரில் இருந்து தழுவப்பட்டுள்ளது. இது 3 விதமான டிரைவிங் மோட் பெற்றுள்ளது.

அதாவது சிட்டி, ஈகோ, ஸ்போர்ட் ஆகும். இதன் வெளிப்புறத்தில் புரொஜெக்டர் லென்ஸ் ஹெட்லேம்ப்ஸ், எல்.இ.டி டி.ஆர்.எல், எல்.இ.டி பின்புற விளக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. ப்ரவுன் மற்றும் பிளாக் வண்ணத்திலான உட்புற அலங்காரத்தைப் பெற்றுள்ளது.

டாடா ஹேரியரில் 2.0 லி டீசல் எஞ்சின் இருக்கிறது. இதன் எஞ்சின் 140 bhp ஆற்றல், 350 Nm டர்க்யூ திறனை வெளிப்படுத்துகிறது. மேலும் 6 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. வரும் 18ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 11 நகரங்களில் டாடா ஹேரியர் மாடல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

அடுத்த செய்தி