ஆப்நகரம்

டொயோட்டா கார்கள் விலை உயர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டொயோட்டா நிறுவனம், இந்திய சந்தையில் விற்கப்படும் கார்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.

Samayam Tamil 28 Nov 2018, 4:57 pm
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்துள்ளதால், இந்திய சந்தையில் விற்கப்படும் தனது கார் மாடல்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்துவதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
Samayam Tamil maxresdefault
கார்களின் விலையை 4% வரை உயர்த்துவதாக டொயோட்டா அறிவிப்பு


இந்தியாவில் விற்பனையாகும் கார் மாடல்களில், டொயோட்டா கிர்லோஸ்கார் தயாரிப்புகளுக்கு தன் இடம் உள்ளது. ஜப்பானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் இந்தியாவில் செடான், ஹேட்ச்பேக், எஸ்யூவி போன்ற அனைத்து வித கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

வரும் ஜனவரி 1, 2019 முதல் இந்தியாவில் விற்பனையாகும் டொயோட்டா கார்களின் விலை 4 சதவீதம் வரை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கார்களின் விலையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பொருளாதார நிலைகளிலும் அந்த தாக்கம் உணரப்படுகிறது. இதனால் வாகன உற்பத்தி தேவைகளில் கூடுதல் பணத்தேவை எழுந்துள்ளதாக டொயோட்டா கூறுகிறது.

இதனால் தொடர்ந்து எழுந்த அழுத்தத்தின் காரணமாக, கார்களின் விலையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது. எனினும், இதனால் ஏற்படும் தாக்கத்தை அறிய சிறிய காலம் ஆகும் என்பது ஆட்டோதுறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

டொயோட்டா நிறுவனம், சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்த புதிய யாரீஸ் மற்றும் இன்னோவா எம்.பி.வி கார்கள் வாடிக்கையாளர்களிடம் அதீத வரவேற்பை பெற்று வருகிறது. தவிர, மற்றொரு மாடலான எட்டியோஸ் காரும் டொயோட்டாவின் சிறந்த விற்பனை திறனை பதிவு செய்யும் மாடலாக இருந்து வருகிறது.

அடுத்த செய்தி