ஆப்நகரம்

தமிழகக் காருக்கு ரூ.1 லட்சம் அபராதமா? தெலுங்கானா போலீஸ் எடுத்த அதிர்ச்சி நடவடிக்கை!

தமிழகத்தில் இருந்து சென்ற காருக்கு, தெலுங்கானா போலீஸ் ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 29 May 2019, 8:08 am
சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறார். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட வாகனங்களை டிஜிட்டல் கேமரா மூலம் போலீசார் படம்பிடித்து விடுகின்றனர்.
Samayam Tamil Traffic Violation


பின்னர் இ-செலான் மூலம் அபராத ரசீதை, வாகன உரிமையாளர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். இந்த வசதி கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் அமலில் இருக்கிறது.

இந்த இ-செலான் அபராதத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தி விட வேண்டும். இந்நிலையில் தமிழக பதிவெண் வாகனத்தை டொயொட்டா இடியோஸ் கார், தெலுங்கானாவிற்கு சென்றுள்ளது.

அப்போது ஐதராபாத் போலீசார் காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி, இ-செலான் கருவியில் காரின் பதிவெண்ணை பதிவிட்டுள்ளனர். அப்போது அதிர்ச்சிகர தகவல் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

குறிப்பிட்ட கார் மீது 78க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் இருக்கின்றன. இவற்றின் அபராதத் தொகை மட்டும் ரூ.96,830 நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் வாகனத்தின் முன்பு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் காரை பறிமுதல் செய்து, உரிய அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே திரும்ப ஒப்படைக்கப் படும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி