ஆப்நகரம்

அனுமதியின்றி ஆளில்லா கார் சேவை தொடங்கிய உபெர் நிறுவனம்!

அமெரிக்காவில் உரிய அனுமதியின்றி ஆளில்லா கார் சேவையை தொடங்கியதாக, உபெர் நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

TNN 16 Dec 2016, 10:54 am
அமெரிக்காவில் உரிய அனுமதியின்றி ஆளில்லா கார் சேவையை தொடங்கியதாக, உபெர் நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
Samayam Tamil uber launched self driving cars in san francisco without permission
அனுமதியின்றி ஆளில்லா கார் சேவை தொடங்கிய உபெர் நிறுவனம்!


உலகம் முழுவதும் வாடகை டாக்ஸி சேவை வழங்கிவரும் உபெர் நிறுவனம், ஆளில்லாமல் தானே இயங்கும் நவீன கார்களையும் டாக்ஸி சேவையில் ஈடுபடுத்த முடிவு செய்தது. இதற்கான சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில், நேற்று அந்நிறுவனம் ஆளில்லா டாக்ஸி சேவையை அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் தொடங்கியது.

இதற்காக தயாரிக்கப்பட்ட வால்வோ எக்ஸ்சி 90 ரகத்திலான சில கார்கள், சான் ஃபிரான்சிஸ்கோ நகர வீதிகளில் உருள தொடங்கின. இதுபற்றி உபெர் நிறுவனம் மகிழ்ச்சியாகக் கொண்டாடிய நிலையில், அடுத்த சில நிமிடங்களிலேயே, அந்த ஆளில்லா கார்களில் ஒன்று சிக்னலில் நிற்காமல் வேகமாகச் சென்று பாதசாரி ஒருவரை இடித்துக் கீழே தள்ளியது.

இதேபோன்று, மற்ற உபெர் ஆளில்லா கார்களும், சாலையில் சென்ற கார்கள் மீது மோதி விபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இதனால், ஆளில்லா கார் சேவை பற்றி பொதுமக்கள் கடும் அதிருப்தி எழுப்பத் தொடங்கியுள்ளனர். மேலும், முறையான அனுமதியின்றி இந்த சேவையை தொடங்கியதாக, சான் ஃபிரான்சிஸ்கோ நகர நிர்வாகம் கூறியுள்ளது.

உபெர் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், விபத்து நிகழ்ந்த நேரத்தில் ஆளில்லா காரை, என்ஜீனியர் ஒருவர் இயக்கி, பரிசீலித்தார் என்றும், அப்போது கார் சேவையில் இல்லை என்றும் உபெர் மறுப்பு தெரிவித்துள்ளது.

Uber Launched Self-Driving Cars in San Francisco Without Permission—and Then One of Them Ran a Red Light.

அடுத்த செய்தி