ஆப்நகரம்

யமஹா எப் இசட் 250 பைக் இன்று அறிமுகம் #YamahaFZ250

யமஹா நிறுவனத்தின் புதிய மாடலான எப் இசட் 250(FZ 250 ) பைக் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

TNN 24 Jan 2017, 7:50 am
யமஹா நிறுவனத்தின் புதிய மாடலான எப் இசட் 250(FZ 250 ) பைக் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
Samayam Tamil yamaha fz 250 india launch today
யமஹா எப் இசட் 250 பைக் இன்று அறிமுகம் #YamahaFZ250


பல்வேறு மாடல் பைக்களை தயாரிக்கும் யமஹா இந்தியா நிறுவனம் தற்போது எப் இசட் வரிசையின் புதிய மாடலான எப் இசட் 250 என்ற பைக்கை இன்று அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவின் இதன் விலை ரூ.1.40 லட்சம் இருக்கும் என கணிக்கப்படுகிறது.


இந்த புதிய மாடலானது பிரேசிலில் விற்பனையாகும் பேஸர் 250 மாடல் பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. மேலும் இந்தியாவிற்கு ஏற்ப இதில் பல்வேறு மாற்றங்களை யமஹா நிறுவனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பேஸர் 250 மாடல் பைக்கிலுள்ள டிஸைன், அலாய் வீல்கள், LED ஹெட்லைட் & டெயில் லைட், எக்ஸாஸ்ட் பைப், பெட்ரோல் டேங்க், ஸ்ப்ளிட் சீட் ஆகியவை வசதிகள் எப் இசட் 250 மாடல் பைக்கிலும் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி