ஆப்நகரம்

ஸ்டைலிஷ் மேக்கிங்கில் யமஹா அறிமுகம் செய்த YZF-R15 மோட்டோGP!

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மோட்டோGP மாடல் பைக்கை யமஹா மோட்டார் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

Samayam Tamil 19 Aug 2018, 4:35 pm
புதுடெல்லி: குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மோட்டோGP மாடல் பைக்கை யமஹா மோட்டார் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
Samayam Tamil Yamaha


யமஹா நிறுவனத்தின் பிரபல ஸ்போர்ட்ஸ் பைக் வரிசையில் YZF-R15 V 3.0 மாடலை ரூ.1.3 லட்சத்திற்கு அறிமுகம் செய்துள்ளது. இது புதிய வடிவமைப்பை பெற்றுள்ளது. இருப்பினும் மோட்டோGP ரேஸ் பைக்கான YZR-M1ல் இருந்து தழுவப்பட்டுள்ளது.

M1 அடிப்படையிலான கிராபிக்ஸ், முகப்பு விளக்கு, எரிபொருள் டேங்க் ஆகியவற்றுடன் நீல நிறத்தில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. எரிபொருள் டேங்கின் மீது, யமஹாவின் கோல்டன் டுயூனிங் ஃபோர்ட் குறியீடு இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பைக்குகளுக்கு மட்டும் ரூ.10,000 முன்பணம் பெற்றுக் கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இதையடுத்து 40 முதல் 55 நாட்களில் கிடைத்துவிடும்.

இயந்திர ரீதியில் எந்தவித வேறுபாடும் இல்லாமல், 19.3 PS ஆற்றல், 155 சிசி VVA எஞ்சின், எல்.இ.டி ஸ்பிலிட் முகப்பு விளக்கு, 140 செக்‌ஷன் பின்பக்க டயர், ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்டவை காணப்படுகின்றன.

FSZ-FI மாடல் பைக்கில் டார்க் நைட் மற்றும் மேட் கிரீன் ஆகிய இரு வண்ணங்களை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் பின்புற டிஸ்க் பிரேக் இருக்கிறது. இதன் விலை ரூ.87,042 ஆகும். ஏற்கனவே இருக்கும் அர்மடா ப்ளூ வண்ணத்தை விட, புதிய வண்ணங்களுக்கு ரூ.1,000 அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Yamaha launches YZF-R15 MotoGP limited edition, new colours for FZS-FI.

அடுத்த செய்தி