ஆப்நகரம்

விராட் கோலி வாங்கிய புதிய கார் இதுதான்- விலையை கேட்டால் மயக்கமே வந்துரும்..!

இந்தியாவிலேயே முதல் நபராக விராட் கோலி வாங்கியுள்ள புதிய ஆடம்பரமான கார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த புதிய கார் பொங்கல் அன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 18 Jan 2020, 11:46 am
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் ஒருநாள் தொடரில் இந்திய அணி ஆவேசம் காட்டி வரும் நிலையில், கேப்டன் விராட் கோலி புதிய கார் வாங்கியிருப்பதாக செய்தி வெளியாகி ஆட்டோத்துறை ஆர்வலர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Samayam Tamil புதிய ஆடம்பரக் காரை வாங்கிய கேப்டன் விராட் கோலி
புதிய ஆடம்பரக் காரை வாங்கிய கேப்டன் விராட் கோலி


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வாகனப் ப்ரியராகவும் அறியப்படுகிறார். அவருக்கு கிரிக்கெட்டுக்கு பிறகு கால்பந்து விளையாடுவது, கைப்பந்து விளையாடுவது, விளம்பரங்களில் நடிப்பது ஆகியவற்றில் ஆர்வம் அதிகம்.

அதேபோல வாகனங்கள் மீதும் அவருக்கு தீராத காதல் உள்ளது. விளையாட்டுத் துறை பிரபலங்கள் என்றாலே வாகனங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிப்பார்கள் என்பது தெரிந்தது தான். ஆனால் இதில் விராட் கோலி வித்தியாசமானவர்.

Read More: புதிய Audi Q8 SUV கார் விற்பனைக்கு அறிமுகம்- இது ஆடம்பரத்தின் உச்சம்..!

மஹிந்திர சிங் தோனிக்கு கார்கள், வாகனங்கள் என இரண்டிலுமே ஆர்வம் அதிகம். அதிலும், குறிப்பாக மிகவும் அரிதான வாகனங்கள் என்றால் எவ்வளவு விலை கொடுத்தும் அதை வாங்கிவிடுவார். அந்தளவுக்கு வாகன பயன்பாட்டில் தோனிக்கு ஆர்வம் அதிகம்.

புதிய ஆடி கியூ8 காரை ஓட்டி வந்த விராட் கோலி


விராட் கோலிக்கு பைக், கார் என இரண்டின் மீதும் ஆர்வமுள்ளது. ஆனால் கார்கள் மீது அவருக்கு சற்று கூடுதல் பாசம் உண்டு. அதிலும், ஆடி கார்கள் என்றால் அவருக்கு கூடுதல் அன்பு. அவருடைய கராஜில் வரிசையாக ஆடி கார்கள் நிறுத்தப்படும் அளவுக்கு கோலியுடன் ஆடி கார்களின் படையே உள்ளது.

இருக்கும் கார் போதாதென்று புதியதாக ஒரு ஆடி காரை வாங்கியுள்ளார் விராட் கோலி. அதுவும் அந்த கார், அண்மையில் தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கடந்த 15ம் தேதி பொங்கல் அன்று விற்பனைக்கு வந்த ஆடி கியூ8 ஆடம்பர எஸ்யூவி கார் தான் அது.

இந்த காரை இந்தியாவிலேயே முதன்முதலாக வாங்கியிருப்பவர் விராட் கோலி தானாம். ஆடம்பரமான எஸ்யூவி ரக காரான கியூ8, இதுவரை ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களில் மிகவும் விலை உயர்ந்த மாடலாகும்.

Read More: கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்- வாயடைத்துப் போன மாருதி, ஹூண்டாய்..!

இதில் 3.0 லிட்டர் டர்போ ஃப்யூவெல் ஸ்டார்ட்டிஃபைடு இஞ்ஜெக்‌ஷன் கொண்ட எஞ்சின் உள்ளது. துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 6 விநாடிகளில் எட்டிப்பிடித்து விடும் இந்த கார், 340 பிஎச்பி பவர் மற்றும் 500 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.

View this post on Instagram #viratkohli loves driving his own car #viralbhayani @viralbhayani A post shared by Viral Bhayani (@viralbhayani) on Jan 15, 2020 at 9:58pm PST

தற்போது இந்த காரை சொந்தமாக வாங்கியுள்ளார் விராட் கோலி. ஆடி கியூ8 கார் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட தருணத்தில், விராட் கோலி அதை ஓட்டிச் செல்வது போன்ற புகைப்படம் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பொதுவெளியில் இந்த காரில் விராட் கோலி வலம் வருவது இதுவே முதல் முறையாகும்.

நேற்று இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கேப்டன் விராட் கோலி.

Read More: புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தேதி அறிவிப்பு..!

முன்னதாக, இந்த போட்டியில் பங்கேற்பதாக விமான நிலையத்திற்கு வந்தார் அவர். அப்போது அவர் ஆடி கியூ8 காரில் வந்திறங்கியது தெரிய வந்தது. அதை தொடர்ந்து இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கடந்த 15ம் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஆடி கியூ8 காருக்கு ரூ. 1.33 கோடி (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விராட் கோலி இந்த புதிய காரை வாங்கியுள்ளதை அடுத்து, ஆடி கியூ8 காருக்கான விற்பனை சூடு பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி