ஆப்நகரம்

தமிழகத்தில் பண தட்டுப்பாடு- அதிமுக மீது எ.வ.வேலு குற்றச்சாட்டு

தமிழகத்தில் பணப்புழக்கம் குறைந்துள்ளதாகவும், பணம் அனைத்தும் போயஸ் கார்டனுக்குச் செல்வதே இதற்கு காரணம் எனவும், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டியுள்ளார்.

TNN 3 Apr 2016, 6:20 pm
தமிழகத்தில் பணப்புழக்கம் குறைந்துள்ளதாகவும், பணம் அனைத்தும் போயஸ் கார்டனுக்குச் செல்வதே இதற்கு காரணம் எனவும், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டியுள்ளார்.
Samayam Tamil because of admk no money flow in tamil nadu former dmk minister ev velu accuses
தமிழகத்தில் பண தட்டுப்பாடு- அதிமுக மீது எ.வ.வேலு குற்றச்சாட்டு

திருவண்ணாமலையில், தேமுதிகவில் இருந்து விலகிய ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள், திமுகவில் இணைந்தனர். அம்மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சருமான எ.வ.வேலு தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பேசிய எ.வ.வேலு, தமிழகத்தில் பணப்புழக்கம் குறைந்துவிட்டதாகக் கூறினார். மாநிலத்தில் உள்ள பணம் அனைத்தும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டனுக்குச் செல்வதால், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி