ஆப்நகரம்

இதற்கு இது அர்த்தமில்லை: திருநாவுக்கரசர்

உத்தரப்பிரதேச தேர்தல் வெற்றியின் மூலம், பிரதமரின் பண மதிப்பிழக்க நடவடிக்கையை மக்கள் ஆதரிக்கிறார்கள் என அர்த்தமில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

TNN 11 Mar 2017, 11:22 am
சென்னை: உத்தரப்பிரதேச தேர்தல் வெற்றியின் மூலம், பிரதமரின் பண மதிப்பிழக்க நடவடிக்கையை மக்கள் ஆதரிக்கிறார்கள் என அர்த்தமில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil bjp leading in up is not the thing that people are supporting demonetisation thirunavukkarasar
இதற்கு இது அர்த்தமில்லை: திருநாவுக்கரசர்


மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று கலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், பாஜக 294 தொகுதிகளிலும் சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி 75, பகுஜன் சமாஜ் 28 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை தாண்டி அதிக இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருவதால், அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட முடிவாகியுள்ளது.

இந்நிலையில்,உத்தரப்பிரதேச தேர்தல் வெற்றியின் மூலம், பிரதமரின் பண மதிப்பிழக்க நடவடிக்கையை மக்கள் ஆதரிக்கிறார்கள் என அர்த்தமில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். அதேசமயம், மக்கள் பஞ்சாபில் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
BJP leading in UP is not the thing that people are supporting Demonetisation: Thirunavukkarasar

அடுத்த செய்தி