ஆப்நகரம்

ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்.என்.எல்-ன் 3 புதிய காம்போ பேக்ஸ் அறிமுகம்

தற்போது ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்களை போலவும் பி.எஸ்.என்.எல் தனது பிராட்பேண்ட் பயனர்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க் சந்தாரார்களுக்கு வழங்கி வருகிறது.

Samayam Tamil 6 May 2017, 7:20 am
தற்போது ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்களை போலவும் பி.எஸ்.என்.எல் தனது பிராட்பேண்ட் பயனர்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க் சந்தாரார்களுக்கு வழங்கி வருகிறது. மேலும், ஏதாவது ஒரு மாற்று நாளில் கட்டண திருத்தம், கால நீட்டிப்பு போன்றவற்றை அறிமுகப்படுத்துகிறது.
Samayam Tamil bsnl announces 3 new combo offers
ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்.என்.எல்-ன் 3 புதிய காம்போ பேக்ஸ் அறிமுகம்


அந்த வகையில், பிஎஸ்என்எல், ரூ.101, ரூ.169 மற்றும் ரூ.189 என்ற 3 புதிய காம்போ திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த அனைத்து திட்டங்களும் 90 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படி 101 வாடிக்கையாளர்களுக்கு ரூ.101 பேலன்ஸ் தொகை உடன் நாள் ஒன்றிற்கு 500 எம்.பி டேட்டாவை 7 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போல் ரூ.169 திட்டத்திற்கு பேலன்ஸ் தொகையுடன் 2 ஜிபி டேட்டாவையும் கொடுக்கிறது. இறுதியில், ரூ.189 பேலன்ஸ் தொகையுடன் 28 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டாவையும் கொடுக்கிறது. இந்த 3 புதிய காம்போ திட்டங்களும் கடந்த 3ம் தேதியிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பிஎஸ்என்எல்-ன் சமீபத்திய ரூ.333, ரூ. 349, மற்றும் ரூ.395 திட்டம் 10 வாரங்களுக்கு மேலும் பலனளிக்கிறது. மற்றும் எஸ்டிவி 333 திட்டம் தற்போது சந்தையில் சிறந்த திட்டமாகவும் திகழ்கிறது. இது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு வழங்குகிறது.

மறுபக்கம் ரூ.395/- திட்டமானது சிறந்த ப்ரீபெயிட் திட்டமாக திகழ்கிறது. இந்த திட்டம் 3000 நிமிடங்கள் பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அழைப்புகளும் மற்றும் பிஎஸ்என்எல் டூ இதர நெட்வர்க் உடனான 1800 நிமிட அழைப்புககளுக்கான நன்மைகளுடன் சேர்த்து 71 நாட்களுக்கு நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான தரவும் வழங்குகிறது.

அடுத்த செய்தி