ஆப்நகரம்

Airtel 5G: ஏர்டெல் 5ஜி சேவை இம்மாதம் தொடங்கும்..அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியீடு!!

ஏர்டெல் 5ஜி இணையச் சேவையை இம்மாதம் அறிமுகப்படுத்தப் படும் என அதன் MD கோபால் விட்டால் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Aug 2022, 11:18 pm
பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் 5ஜி சேவையை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தொடங்கும் என அதன் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Airtel 5g launch


மேலும் அடுத்த ஆண்டு மார்ச் 2024க்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களையும் முக்கிய கிராமப்புறங்களையும் ஏர்டெல் 5ஜி சேவையை கொண்டு சேர்க்கும் எனவும் விட்டல் கூறியுள்ளார்.

பார்தி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் முடிவடைந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண்களை 3.5 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளைப் பாதுகாப்பதன் மூலம் வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி குறைந்த மற்றும் மிட்-பேண்ட் அலைவரிசையில் ரேடியோ அலைகளை மொத்தமாக ரூ 43,040 கோடிக்கும் வாங்கியுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் நடப்பு நிதியாண்டின் ஜூன் 2022 உடன் முடிவடைந்த காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபத்தில் ஐந்து மடங்கு உயர்ந்து ரூ. 1,607 கோடியாகப் பதிவு செய்துள்ளது.

அதிலும் முக்கியமாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் ரூ. 283.5 கோடி லாபத்தைப் பதிவு செய்துள்ளது. மேலும் மொபைல் சேவை வருவாயானது அதன் YoY அடிப்படையில் 27% அதிகரித்து ரூ.14,305.6 கோடியிலிருந்து ரூ.18,220 கோடியாக உயர்ந்துள்ளது.

இன்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலையானது 1.53% உயர்ந்து ரூ.750.10 ஆக உள்ளது. 5ஜி சேவை அறிமுகத்தைத் தொடர்ந்து அதன் பங்கின் விலை இனி வரும் காலங்களில் உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்