ஆப்நகரம்

மின்சார வாகனங்களுக்கு சலுகை.. பட்ஜெட்டில் வருமா நல்ல செய்தி?

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகை நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil | 31 Jan 2023, 9:07 am
Samayam Tamil EV
புதிய வாகனம் வாங்கத் திட்டமிட்டவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில், நீங்கள் மின்சார வாகனம் (EV) வாங்கினால் அதற்கு அரசாங்கம் வருமான வரி விலக்கு அளிக்கிறது. வருமான வரியில் தள்ளுபடி பெற விரும்புவோர் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும். இந்த விலக்கு 2023 மார்ச் 31 அன்று முடிவடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், அரசாங்கம் இந்தத் திட்டத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தை 2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இத்திட்டம் 2025ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டு முதல்!

எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்க யாராவது கடன் வாங்கினால் அந்த தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை மத்திய அரசு 2019ஆம் ஆண்டில் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ், ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரி லக்கு பெறலாம். இந்தத் திட்டம் 2023 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அரசாங்கம் இந்த வரி விலக்கை மேலும் நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேதி நீட்டிக்கப்படலாம்!

தற்போது இந்தியாவில் மின்சார வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது. இவ்வாறான நிலையில், அவற்றை மக்கள் எளிதாக வாங்கக் கூடிய வகையில் மாற்ற வேண்டிய தேவை உள்ளது. அப்படி ஒரு திட்டம் இருந்தால் மக்கள் அதை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். எனவே, பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை அரசு வெளியிடலாம். இந்த வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி மிகவும் விலை உயர்ந்தது. இதன் காரணமாக மின்சார வாகனத்தின் விலையும் அதிகமாக உள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்.. சூடுபிடிக்கும் மத்திய பட்ஜெட்!
சார்ஜிங் வசதி!

மின்சார வாகனங்களை மக்கள் அதிகமாக வாங்க, உள்கட்டமைப்பு வசதிகளிலும் அரசு கவனம் செலுத்தி வருவதால் அதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது தவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சார்ஜிங் ஸ்டேஷன் நெட்வொர்க்கை அதிகமாக அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் மின்சார வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரையில் சார்ஜிங் செய்வதே வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரச்சினையாக உள்ளது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2023 எப்படி இருக்கப் போகிறது? அனல் பறக்கும் விஷயங்களின் லிஸ்ட்!
அதிகரிக்கும் விற்பனை!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு இருந்தாலும் பெட்ரோல் விலையேற்றம் போன்ற காரணங்களால் நிறையப் பேர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். அதற்கு ஏற்றாற்போல புதிய புதிய மாடல்கள் சந்தைக்கு வந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கின்றன. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

செந்தில் குமார் கட்டுரையாளரை பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... Read More

அடுத்த செய்தி

டிரெண்டிங்