ஆப்நகரம்

Budget 2021: இந்த வருஷமாவது வரி சேமிப்பு நிவாரணம் கிடைக்குமா?

மத்திய பட்ஜெட் அறிக்கை இன்னும் சில தினங்களில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதில், வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் சலுகை வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 29 Jan 2021, 11:52 pm
பிப்ரவரி 1ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதும் கூடுதல் வரிச் சலுகைகளை எதிர்பார்ப்பது சாமானிய மக்களுக்கு வழக்கம்தான்.
Samayam Tamil Money


குறிப்பாக, நடுத்தர வருமானம் பெறும் நபர்கள் வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரம்பு உயர்வை எதிர்பார்ப்பார்கள். இப்போது கொரோனா காலகட்டத்தில் மக்கள் மோசமான காலகட்டத்தை சந்தித்துள்ள நிலையில், கூடுதல் சலுகைகளை எதிர்பார்ப்பது இயல்புதான்.

தற்போது பிரிவு 80சி கீழ் வரி சலுகைகள் வரம்பு 1.5 லட்சம் ரூபாயாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சலுகை வரம்பு ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டுள்ளது. வரி சேமிப்பு முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி மிகப் பிரபலமானதாக இருக்கிறது.

EPF, PPF, வரி சேமிப்பு Fixed deposits, UNLIP திட்டங்கள், தேசிய சேமிப்பு சான்றிதழ், ELSS திட்டம் ஆகியவை வருமான வரியை சேமிக்க சிறந்த முதலீடுகள். இதுபோக, பிரிவு 80சி கீழ் குழந்தைகளின் கல்வி செலவு, வீட்டுக் கடன் அசல் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றுக்கு சலுகைகள் கிடைக்கிறது.

எனவே, மிடில் கிளாஸ் வரி செலுத்தும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, கடந்த பத்து ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டும் வரம்பு உயர்த்தப்பட்டிருப்பது மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்