ஆப்நகரம்

Budget 2022: இரண்டு கட்டங்களாக நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்!

2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தகவல்.

Samayam Tamil 14 Jan 2022, 5:06 pm
2022ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு பொதுமக்கள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் காத்திருக்கின்றனர். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பணியில் மத்திய அரசும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா மூன்றாம் அலையும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil parliament


இந்நிலையில், இந்த முறை பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரையிலும், இரண்டாம் பாதி மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகார அமைச்சருக்கான கூடுதல் பொதுச் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், “மாநிலங்களவையின் 256ஆவது கூட்டத்தொடர் (பட்ஜெட் கூட்டத்தொடர் - 2022) ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடையலாம்” என்று தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்: வரியைக் குறைக்க ஆட்டோமொபைல் துறை வேண்டுகோள்!
ஜனவரி 31ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளுக்கும் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார். 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். மார்ச் 18ஆம் தேதி ஹோலி பண்டிகை விடுமுறையன்று அவை இயங்காது.

அண்மையில் நாடாளுமன்றத்தின் 400 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாநிலங்களவை தலைவரும், மக்களவை சபாநாயகரும் நிலை குறித்து ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்