ஆப்நகரம்

நிதிப்பற்றாக்குறை 3.3ஆக இருக்கும்: அருண் ஜெட்லி

நடப்பு நிதியாண்டுக்கான (2-18-2019) நிதிப் பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Feb 2018, 4:32 pm
நடப்பு நிதியாண்டுக்கான (2-18-2019) நிதிப் பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil budget 2018 govt misses fiscal deficit target projects fy19 target at 3 3 per cent
நிதிப்பற்றாக்குறை 3.3ஆக இருக்கும்: அருண் ஜெட்லி

இன்றைய பட்ஜெட் தாக்கலின்போது அருண் ஜெட்லி கூறுகையில், ''வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை முதலில் 3.2 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இது தற்போது, 3.5 சதவீதமாக இருக்கும்.

நடப்பு 2018-2019 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும். கடந்த 2014-2015ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 4.1 சதவீதமாக இருந்தது. இது 2015-2016ஆம் ஆண்டில் 3.9 சதவீதமாக குறைக்கப்பட்டது. 2016-2017ஆம் ஆண்டில் 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. நாட்டின் இறையாண்மையை காட்டுவதே நிதிப் பற்றாக்குறை தான். அது குறைந்துள்ளது'' என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்