ஆப்நகரம்

Budget 2021: சுகாதார துறைக்கு என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?

2021 பட்ஜெட் அறிக்கையில் சுகாதார துறைக்கு என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?

Samayam Tamil 22 Jan 2021, 10:51 pm
2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கொரோனா காலத்தில் மக்கள் ஏராளமான துயரங்களை சந்தித்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.
Samayam Tamil Health Sector


சுகாதாரம், மருத்துவ துறைகளுக்கு பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்? பொதுவாக, இந்தியாவில் சுகாதாரத்திற்கு அரசு செலவிடுவது மிக மிக சொற்பம் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. சுகாதாரத் துறையில் அரசு செலவை அதிகரிக்க வேண்டுமென பல தரப்புகளிலும் வலியுறுத்தப்படுகிறது.

கடந்த ஒரு ஆண்டுகாலத்தில் கொரோனா வைரஸ் நம்மை பெரும் நெருக்கடியில் தள்ளியிருக்கிறது. இந்த சூழலில், சுகாதாரத்திற்கு செலவு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி கொரோனா அனைவருக்கும் பாடம் எடுத்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் சுகாதார துறைக்கு பெரிதாக எதிர்பார்ப்புகள் இருக்காது. எனினும், இந்த முறை சுகாதார துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறு நகரங்களில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் கொள்கை ரீதியான மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைக்கு வரிச் சலுகைகள், அரசு மருத்துவமனைகளின் மேம்பாடு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கவரேஜை உயர்த்துவது ஆகியவற்றை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்காக, மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்