ஆப்நகரம்

ஜிடிபி வளர்ச்சி இந்தாண்டு 6.75%மாக இருக்கும்!!

நாட்டின் நடப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 6.75 சதவீதமாக இருக்கும் என்று இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Jan 2018, 4:41 pm
நாட்டின் நடப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 6.75 சதவீதமாக இருக்கும் என்று இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil economic survey gdp to grow at 6 75 per cent this year other key takeaways
ஜிடிபி வளர்ச்சி இந்தாண்டு 6.75%மாக இருக்கும்!!


உலக அளவில் கடந்த ஆண்டுகளில் வளர்ந்து வந்த பொருளாதார நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதாவது தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ஒரே மாதிரி 4 சதவீத வளர்ச்சியைப் பெற்று வந்துள்ளது. இந்த சமயத்தில் உலக பொருளாதார வளர்ச்சி வெறும் 3 சதவீதமாக இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய ஆவ்வுகளைப் பார்ப்போம்:

• நடப்பாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.75 சதவீதமாக இருக்கும். அடுத்த, அதாவது 2018-2019 நிதியாண்டில் இது 7 முதல் 7.5 சதவீதம் வரை வளர்ச்சி பெறும். கடந்த ஆகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.

• தொடர்ந்து எண்ணெய் விலை அதிகரித்து வருது கவலை அளிப்பதாக உள்ளது.

• நடப்பாண்டில் உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சி 8 சதவீதமாக உள்ளது.

• வேலை வாய்ப்பு மற்றும் விவசாயம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன.

• ஜிஎஸ்டி மற்றும் ஏர் இந்தியாவுக்கு தீர்வு காணுதல்

• நுகர்தலுக்கான தேவை அடுத்தாண்டு அதிகரிக்கும். எண்ணெய் விலை உயர்வால் இது பாதிக்கப்படலாம். உலக எண்ணெய் விலையில் 10 டாலர் விலை அதிகரித்து இருப்பது நாட்டின் ஜிடிபியை 0.2 முதல் 0.3 வரை பாதித்துள்ளது.

• நடப்பாண்டில் விவசாய வளர்ச்சி 2.1 சதவீதம் இருக்கும்

• தனியார் முதலீடு அதிகரிக்கும்

• ஜிஎஸ்டி அமலுக்குப் பின்னர் 1.8 கோடி புதிய வருமான வரி செலுத்துவோர் வரி செலுத்துவோர் பட்டியலில் சேர்ந்துள்ளனர். இந்த வகையில் நேரடி வரி செலுத்துவோர் பட்டியலில் 50 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

• இந்தியாவின் புதிய பொருளாதார வளர்ச்சியில் 10 மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நேரடி மற்றும் மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சேமிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது அறியப்பட்டுள்ளது

• பருவ நிலை மாற்றம் விவசாய உற்பத்தியை பாதித்துள்ளது

• ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டாண்மை தத்துவத்தை நிலை நிறுத்தியுள்ளது

• இந்தியாவின் பொருளாதாரம் நிகர நுகர்வோர் என்ற நிலையில் இருந்து மெதுவாக நிகர உற்பத்தியாளர்கள் என்ற நிலைக்கு மாறி வருகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் அளித்த பேட்டியிலும் இதே கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்