ஆப்நகரம்

மெட்ரோ நகரங்களை இணைக்கும் ‘தங்க நாற்கரச் சாலைத் திட்டத்திற்கு’ பட்ஜெட்டில் ஒப்புதல்!

தங்க நாற்கரச் சாலைத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNN 18 Jan 2018, 5:21 pm
டெல்லி: தங்க நாற்கரச் சாலைத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil golden quadrilateral will be approved on this budget
மெட்ரோ நகரங்களை இணைக்கும் ‘தங்க நாற்கரச் சாலைத் திட்டத்திற்கு’ பட்ஜெட்டில் ஒப்புதல்!


டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா நகரங்களை இணைக்கும் சாலை வழித் திட்டத்திற்கு ‘தங்க நாற்கரச் சாலைத் திட்டம்’ என்று பெயர்.

இது 1998ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் வாஜ்பாயினால் கொண்டு வரப்பட்டது.

கடந்த நிதியாண்டில் டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹௌரா ஆகிய பகுதிகளை இணைக்கும் திட்டத்திற்கு ரூ.11,189 கோடி மற்றும் ரூ.6875 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போது மீதமுள்ள டெல்லி-சென்னை, சென்னை-ஹௌரா, சென்னை-மும்பை, ஹௌரா-மும்பை ஆகிய பகுதிகளை அதிவேக ரயில் பாதை மூலம் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக வரும் பட்ஜெட்டில் ரூ.40,000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டம் நிறைவு பெற்றால், நாட்டின் மெட்ரோ நகரங்களுக்கு செல்லும் நேரம் 50% அளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Golden quadrilateral will be approved on this budget.

அடுத்த செய்தி

டிரெண்டிங்