ஆப்நகரம்

49 பொருட்களுக்கு அதிரடி வரி குறைப்பு; மத்திய அரசு அறிவிப்பு

ஜிஎஸ்டி கவுன்சிலின் 25வது ஆலோசனைக் கூட்டத்தில் 29 வகையான கைவினைப் பொருட்களுக்கு 12-18 சதவிதமாக உள்ள வரியை முழுமைாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Jan 2018, 1:15 pm
ஜிஎஸ்டி கவுன்சிலின் 25வது ஆலோசனைக் கூட்டத்தில் 29 வகையான கைவினைப் பொருட்களுக்கு 12-18 சதவிதமாக உள்ள வரியை முழுமைாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 49 வகையான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
Samayam Tamil gst rates reduced on 29 items 53 services decision on simplifying filing pending
49 பொருட்களுக்கு அதிரடி வரி குறைப்பு; மத்திய அரசு அறிவிப்பு


28% இருந்த ஜிஎஸ்டி, 18% ஆக குறைக்கப்பட்ட பொருட்கள்

பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள், பயோ எரிசக்தியில் இயங்கும் பொது போக்குவரத்து பேருந்துகளுக்கு ஆகியவற்றுக்கு, 28% இருந்த ஜிஎஸ்டி தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.


18% இருந்த ஜிஎஸ்டி, 12% ஆக குறைக்கப்பட்ட பொருட்கள்

வேளாண்மை உரங்கள், பாஸ்பரிக் ஆசிட், சொட் நீர் பாசன கருவிகள், சர்க்கரை பயன்படுத்தி செய்யப்பட்ட சாக்லேட்டுக்கள், பயோ டீசல், 20 லிட்டர் குடிநீர் கேன் ஆகியவற்றுக்கு, 18% இருந்த ஜிஎஸ்டி தற்போது 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.


18% இருந்த ஜிஎஸ்டி, 5% ஆக குறைக்கப்பட்ட பொருட்கள்

செயற்கைகோள் ராக்கெட்டுக்களுக்கான உதரி பாகங்கள், மெகந்தி கோன், தனியார் நிறுவனங்களின் சமையல் எரிவாயு சிலிண்டர், தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றுக்கு, 18% இருந்த ஜிஎஸ்டி தற்போது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.


5% இருந்த ஜிஎஸ்டி முழு வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்

அரிசி, தவிடு உள்ளிட்ட பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி இருந்தது. இந்நிலையில், தற்போது இதற்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

5% இருந்த ஜிஎஸ்டி 0.25% ஆக குறைக்கப்பட்ட பொருட்கள்

ஆபரணங்கள், விலையுர்ந்த கற்கள், வைரம் ஆகியவற்றுக்கு, 5% இருந்த ஜிஎஸ்டி தற்போது 0.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

12% இருந்த ஜிஎஸ்டி 18% ஆக உயர்த்தப்பட்ட பொருட்கள்

சிகரெட்டுக்களுக்கு உண்டான பில்டர்-க்கு வரி 12% ஆக இருந்த நிலையில், தற்போது அதன் வரி 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்