ஆப்நகரம்

மோடி தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சியின் கடைசி பட்ஜெட்!

பிரதமர் மோடி தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சியின் கடைசி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

Samayam Tamil 1 Feb 2018, 9:02 am
பிரதமர் மோடி தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சியின் கடைசி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
Samayam Tamil prime minister modis 5 year rule today is the last budget 2018
மோடி தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சியின் கடைசி பட்ஜெட்!


2018 – 2019ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். வரும் 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அந்த ஆண்டில், பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்படும். ஆனால், தேர்தலுக்கு பிறகு அமையும், அரசு தான் ஒரு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும். இதன் காரணமாக, பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாக கருதப்படுகிறது. அதுவும், பிரதமர் மோடி தலைமையிலான 5 ஆண்டு கால ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட்.

ஜிஎஸ்டி அமலுக்கு முன் உற்பத்தி வரி, சுங்க வரி, சேவை வரி ஆகியவை மூலம் கிடைத்த வருவாய் மூலம் தனிக்கணக்கும், ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு சுங்க வரி ஆகியவை மூலம் கிடைத்த வருவாய்க்கான தனிக்கணக்கும் இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்