ஆப்நகரம்

ஐயோ! பட்ஜெட் அறிவிப்பால் இத்தனை பொருட்களின் விலை உயர்கிறதா!

இரண்டு மணி நேரம் வரை சென்ற இந்த நீண்ட 2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில் பல்வேறு புதிய சலுகைகள் அறிமுகமாகியுள்ளன. சில சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Samayam Tamil 5 Jul 2019, 5:01 pm
இன்று வெளியான 2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பால் சில பொருட்களின் விலை குறையவும் சில பொருட்களின் விலை அதிகமாகவும் உள்ளன.
Samayam Tamil shutterstock_1216307008


2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இரண்டு மணி நேரம் வரை சென்ற இந்த நீண்ட பட்ஜெட் உரையில் பல்வேறு புதிய சலுகைகள் அறிமுகமாகியுள்ளன. சில சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே துறையில் 2030 வரை 50 லட்சம் கோடி முதலீடு, விவசாயிகள் வருமானம் இரு மடங்கு உயர ‘ஜீரோ பட்ஜெட் விவசாயம்’, எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கினால் அதிரடி வருமான வரிச்சலுகை, தங்கத்தின் மீதான இறங்குமதி வரி 10%ல் இருந்து 12.5%ஆக உயா்வு, குறைந்த விலை வீடு வாங்குவோருக்கு கூடுதல் வரிவிலக்கு, உயர்கல்விக்காக புதிய ஆணையம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றன.

இது தவிர தனியாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பட்ஜெட்டில் குறிப்பிட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு பற்றி எதையும் குறிப்பிடவில்லை என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட் தாக்கத்தால் எந்தெந்த பொருட்கள் உயரப்போகின்றன? எவையெல்லாம் விலை குறையப்போகின்றன என்பதைப் அறிந்துகொள்ளுங்கள்.

பொருட்கள் விலையில் மாற்றம்
பெட்ரோல் உயரும்
டீசல் உயரும்
தங்கம் உயரும்
இறக்குமதியாகும் புத்தகங்கள் உயரும்
முந்திரி உயரும்
பிவிசி உயரும்
வினைல் உயரும்
டைல்ஸ் உயரும்
உலோகப் பொருட்கள் உயரும்
சில வகை பர்னிச்சர் உயரும்
ஆட்டோ பாகங்கள் உயரும்
செயற்கை ரப்பர் உயரும்
மார்பிள் ஸ்லாப் உயரும்
ஆப்டிகல் ஃபைர் கேபிள் உயரும்
சிசிடிவி கேமரா உயரும்
ஐ.பி. கேமரா உயரும்
டிஜிட்டல் மற்றும் நெட்வொர்க் ரெக்கார்டர்கள் உயரும்
சிகரெட் உயரும்
மின்சார சாதனங்கள் குறையும்
மின்சார வாகனங்கள் குறையும்

அடுத்த செய்தி

டிரெண்டிங்