ஆப்நகரம்

வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட்.. டிவிஎஸ் நிறுவனம் வரவேற்பு!

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 1 Feb 2022, 7:40 pm
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து கலவையான கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆட்டோமொபைல் துறையினர் இந்த பட்ஜெட்டை வரவேற்றுள்ளனர். இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூலதனச் செலவுகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று எனவும், பட்ஜெட்டில் வெளியான பிஎம் கதி சக்தி திட்டத்தை ஆட்டோமொபைல் துறையினர் வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil budget tvs


இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் கூறுகையில், ”வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மத்திய அரசின் முயற்சிகளால் கிராமப்புற தேவை அதிகரிக்கும். எலெக்ட்ரிக் வாகனத் துறையில் சுகாதாரமான பசுமை போக்குவரத்து திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். எலெக்ட்ரிக் வாகனத் துறையில் பேட்டரி மாற்ற பாலிசி நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம். எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு கழிவு மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கான தேவை இப்போது அதிகமாக உள்ளது” என்றார்.

மிடில் கிளாஸுக்கு ஏற்கெனவே நிறைய செஞ்சாச்சு.. பட்ஜெட் பற்றி பியூஷ் கோயல்!
இந்திய இளைஞர்களின் திறன் மேம்பாடு மிக முக்கியமான ஒன்றாகும், அதை நோக்கிய இந்திய அரசின் திட்டங்களையும் முயற்சிகளையும் பாராட்டுவதாக வேணு ஸ்ரீனிவாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்