ஆப்நகரம்

பட்ஜெட் 2018: ஏற்றம் காணும் மொபைல், டிவி மற்றும் வாட்ச்களின் விலை!

இன்று அறிவிக்கப்பட்ட 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், சுங்க வரி அதிகரிக்கப்பட்டதால் மொபைல் போன் மற்றும் டிவி போன்ற மின் சாதனப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Samayam Tamil 1 Feb 2018, 4:50 pm
டெல்லி: இன்று அறிவிக்கப்பட்ட 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், சுங்க வரி அதிகரிக்கப்பட்டதால் மொபைல் போன் மற்றும் டிவி போன்ற மின் சாதனப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil union budget 2018 these electronic devices are getting costly
பட்ஜெட் 2018: ஏற்றம் காணும் மொபைல், டிவி மற்றும் வாட்ச்களின் விலை!


நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வர உள்ளதால், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்த பட்ஜெட்டில், மேக் இன் இந்தியா திட்டத்தை மேலும் ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களுக்கான சுங்க வரி 15% சதவீதத்திலிருந்து 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், மொபைல் மற்றும் டிவி ஆகியவற்றின் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி 7.5-10% இருந்து 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மொபைல், டிவி மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றின் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்