ஆப்நகரம்

நாடு முழுவதும் ஒரு தேசம் ஒரு கிரிட் திட்டம்: மாநில நலன் பாதிக்கப்படுமா?

மின்சாரத்தில் அனைத்து மாநிலங்களையும் இணைப்பது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மின்சாராம் இருக்கும் மாநிலங்களில் இருந்து இல்லாத மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும்

Samayam Tamil 5 Jul 2019, 11:34 am

நாடு முழுவதும் இருக்கும் அனைத்து மாநிலங்களையும் மின்சாரத்தின் மூலம் இணைப்பது என்று தனது பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் மின்சாரம் இல்லை என்ற நடைமுறை கொண்டு வரப்படும். அதிகமாக மின்சாரம் இருக்கும் மாநிலத்தில் இருந்து மின்சாரம் பற்றாக்குறை இருக்கும் மாநிலத்திற்கு மின்சாரம் கொண்டு செல்லப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Nirmala

Budget Live Updates: இந்தியப் பொருளாதாரம் 2.7 லட்சம் கோடி டாலராக உயரும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
இதுதான் தற்போது தமிழகத்தில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உதாரணத்திற்கு தமிழகத்தில் அதிக மின்சாரம் இருக்கும் பட்சத்தில் பற்றாக்குறை உள்ள பீகார் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும். இது மாநிலத்தின் நலன் பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முழு கட்டுப்பாடும் மத்திய அரசின் கீழ் செல்லும்போது மாநில நலன் பாதிக்கப்படலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்