ஆப்நகரம்

பட்ஜெட் 2022: ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு!

வரும் மத்திய பட்ஜெட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன?

Samayam Tamil 23 Jan 2022, 3:29 pm
2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் குறித்து பொதுமக்கள், தொழில்துறையினர், வணிகர்கள் என பல தரப்பினரிடையே எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
Samayam Tamil start up


இந்நிலையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை எதிர்பார்க்கின்றன. குறிப்பாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கைகளை, வரி சலுகைகள் போன்றவற்றை அறிமுகப்படுத்த வேண்டுமென்பது ஸ்டார்ட் அப்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வரி சலுகைகள் மூலம் புதுமைகளுக்காக (innovation) செலவு செய்ய முடியும். இதுபோக, தொழில் செய்வதை எளிதாக்குதல், இணக்கச் செலவுகளை குறைத்தல் போன்ற உதவிகளையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

மத்திய பட்ஜெட்: சிறு நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன?
கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கடும் வேகத்தில் உயர்ந்துள்ளன. எனவே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க அரசு கூடுதல் ஆதரவளிக்க வேண்டுமென ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

சிக்கல் இல்லாமல் கடன் வழங்குவது, வரி ஆட்டோமேஷன், பேப்பர் இல்லா டிஜிட்டல் கடன் ஒப்புதல், டிஜிட்டல் வங்கிச் சேவையை ஊக்குவிப்பது போன்றவை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் (MSME) வளர்ச்சிக்கு உதவும் என ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

இதுபோக, ஆன்லைன் வியாபாரம் செய்வோருக்கு ஜிஎஸ்டி செயல்முறையை எளிமைப்படுத்தினால் லட்சக்கணக்கான சிறு தொழில்கள் பயனடைவார்கள் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்