ஆப்நகரம்

EV: எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைப்பு.. பட்ஜெட்டில் கனவு நிறைவேறுமா?

மத்திய பட்ஜெட் 2023 அறிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 31 Jan 2023, 6:09 pm
Samayam Tamil EV
EV
நாளை (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு இன்று பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. மேலும் இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் ஊதியதாரர்கள், மிடில் கிளாஸ் மக்கள், தொழில்துறையினர் என பல தரப்பினருக்கும் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, எலெக்ட்ரிக் வாகன துறையினர் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே எலெகெட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வமும், எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. எனினும், எலெக்ட்ரிக் வாகனங்களை மேலும் ஊக்குவித்து விற்பனையை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்பது எலெக்ட்ரிக் வாகனங்கள் துறை மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும்.. ப.சிதம்பரம் பட்ஜெட் அட்வைஸ்!
குறிப்பாக வாடிக்கையாளர்களை பொறுத்தவரை எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும் வகையில் மானியம், ஊக்கத்தொகை, வரி குறைப்பு போன்ற சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை இன்னும் உயர்வாக உள்ள சூழலில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியையும், எலெக்ட்ரிக் டாக்ஸி சேவைகளையும் ஊக்குவிக்க சலுகைகள் தேவை என தொழில்துறையினர் கூறுகின்றனர். மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் மையங்களை அமைக்க சலுகைகள், ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் தொழில்துறையினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுபோக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான பேட்டரி மற்றும் செல்களுக்கு ஜிஎஸ்டி 18% இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட வேண்டும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் பேட்டரி உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதும் இன்னொரு எதிர்பார்ப்பாக உள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்