ஆப்நகரம்

பட்ஜெட்: இது ஒரு ஜோக்.. நிர்மலா மீட்டிங் புறக்கணிப்பு.. தொழிற்சங்கங்கள் தடாலடி முடிவு!

பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக 10 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 27 Nov 2022, 3:49 pm
2023ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் அறிக்கையை தயார் செய்வதற்கான பணிகளை நிதியமைச்சகம் தொடங்கிவிட்டது. பட்ஜெட் குறித்து பல தரப்புகளிடம் நிதியமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த வாரம் மாநிலங்களின் நிதியமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Samayam Tamil Nirmala sitharaman
Nirmala sitharaman


இதில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தார். அதேபோல இதர மாநிலங்களின் நிதியமைச்சர்களும் பங்கேற்று பல்வேறு கருத்துகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

இதேபோல, தொழிற்சங்கங்களிடம் பட்ஜெட் குறித்த கருத்துகளை பெறுவதற்காக நிதியமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், நிதியமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தை 10 தொழிற்சங்கங்கள் அடங்கிய அமைப்பு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ்.. சென்னை மெட்ரோ.. திருப்பூர் ஜவுளி.. நிர்மலா சீதாராமனிடம் நேரடியாக கேட்ட பிடிஆர்
புறக்கணிப்புக்கு காரணம் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் தொழிற்சங்கங்கள் உள்பட தொழில்துறை தரப்பில் கருத்துகள் கேட்கப்படும். எனினும், இடையே கொரோனா பாதிப்பு காலகட்டங்களில் காணொலி வடிவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆலோசனைக் கூட்டத்தில் கருத்துகளை தெரிவிக்க போதிய நேரம் வழங்கப்படவில்லை எனவும், நிதியமைச்சர் வெளிப்படையான விவாதத்துக்கு வர வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஜோக்

கொரோனா பாதிப்பு முடிந்தபிறகும் காணொலியில் ஏன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது என தொழிற்சங்கங்கள் கேள்வியெழுப்பியுள்ளன. மேலும், தொழிற்சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு சங்கமும் மூன்று நிமிடம் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறது. எனவே, இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு ஜோக் எனவும், இந்த ஜோக்கில் பங்கேற்கப்போவதில்லை எனவும் 10 தொழிற்சங்கங்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.

12 தொழிற்சங்கங்கள் அடங்கிய கூட்டம் மொத்தம் 75 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்படுவதாகவும், ஒரு சங்கம் 3 நிமிடம் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவதாகவும் தொழிற்சங்கங்களின் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள்

  • நேரடி ஆலோசனைக் கூட்டம் வேண்டும்.

  • ஒவ்வொரு பேச்சாளருக்கும் போதிய நேரம் ஒதுக்க வேண்டும்.

  • அரசின் கொள்கைகள் குறித்து வேளிப்படையாக விவாதிக்க நிதியமைச்சருக்கு அழைப்பு.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்